வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை

Published on

விருச்சிகம்

அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. இதனால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் யோகமும் உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாகி வாழ்க்கைத்தரம் உயரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

புதிய தொழில், உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமாகும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். வீடு, வாகனம் முயற்சிகள் கைகூடும்.

வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.தாய் தந்தை, உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பெண்களுக்கு புதிய தொழில் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். அமாவாசை அன்று முருகன் கோவிலில் அன்னதானம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com