விருச்சிகம் - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம் வார ராசிபலன்
Published on

தடைகள் தகறும் வாரம். ராசிக்கு குரு, சூரியன் மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். உடல் நலக் கோளாறுகள் சீராகும். செவ்வாய்க்கிழமை சிகப்பு அரளி மாலை அணிவித்து முருகனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com