விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 5.7.2026 முதல் 11.7.2026 வரை

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும்.
Viruchigam weekly rasipalan
விருச்சிகம் வார ராசிபலன்
Published on

விருச்சிகம்

சகாயங்கள் மிகுந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் மற்றும் குருவின் பார்வையும் ராசியில் பதிகிறது. குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.உடல் தேஜஸ் பெரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிலையான, நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். பருவ வயதினருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்று நல்ல குடும்பம் அமையும்.தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். தந்தை வழி உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசியல் ஆர்வம், ஆதாயம் உண்டு. புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும். வீடு கட்ட, அல்லது புதிய தொழில் துவங்க கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றமும் லாபமும் மகிழ்ச்சியைத் தரும். திருமண வாய்ப்பு உடனே தேடி வரும் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிரத்யங்கரா தேவியை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com