விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

புதிய வியாபார தொடர்புகள் மூலம் வருமானம் பெருகி வாழ்க்கை வளமாகும்.
Viruchigam weekly rasipalan
விருச்சிகம் வார ராசிபலன்
Published on

விருச்சிகம்

நன்மைகளே மிகுதியாக நடக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் தன் வீட்டை தானே பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு புதன் சுக்ரன் சேர்க்கை உள்ளதால் நம்பிக்கை அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். தந்தைவழி சொத்துக்களில் நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பபெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய வியாபார தொடர்புகள் மூலம் வருமானம் பெருகி வாழ்க்கை வளமாகும். குடும்ப வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். கடன் தொல்லை , சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும்.மேலதிகாரியின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். விரும்பிய கடன் அல்லது உதவித் தொகை தேடி வரும். மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை அகலும். ஆரோக்கியம் சீராகும்.வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து புவனேஸ்வரியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com