ஆனி மாத ராசிபலன்

Published on

சந்தர்ப்பங்களை சாதகமாக மாற்றிக்கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!

ஆனி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர்வும், உன்னதமான வாய்ப்புகளும் வந்துசேரும். கல்யாணம் போன்ற சுபாகரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கவுரவம், புகழ் கூடும்.

சனி வக்ரம்

ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதத்தில் சம்பள உயர்வும் வரலாம்.

கடக - புதன்

ஆனி 12-ந் தேதி, பாக்கிய ஸ்தானத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியாக விளங்குபவர் புதன். லாபாதிபதியான அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்பனையாகும். அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் வருமானப் பெருக்கம் உண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறை வேறும்.

கடக - சுக்ரன்

ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சப்தமாதிபதியான அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது மங்கல ஓசை மனையில் கேட்கும். குடும்ப உறுப்பினர்களின் குறை களைத் தீர்க்க முன்வருவீர்கள். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். வருங்காலத்தை சீரமைத்துக்கொள்ள எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

ரிஷப - செவ்வாய்

ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனான செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து பணிபுரிய விருப்பப் படுவர். மனை விற்பனை தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையும். பூமி விற்பனையால் லாபமும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். நீண்ட நாட்களாக முடிவடையாத வழக்குகள் இப்பொழுது உங்களுக்கு சாதகமாக முடியும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்:-

ஜூன்: 15, 16, 22, 27, 28, ஜூலை: 8, 9, 12, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

X

Maalai Malar
www.maalaimalar.com