

சுமாரான வாரம். ராசிக்கு சூரியனின் சம சப்தம பார்வையும் சனியின் பத்தாம் பார்வையும், செவ்வாயின் 8ம் பார்வையும் உள்ளது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மனஉளைச்சல் ஏற்படலாம். சனி, செவ்வாய் சம்பந்தம் ராசிக்கு இருப்பதால் செயற்கை முறை கருத்தரிப்பை ஒத்தி வைக்கலாம். உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுவது நல்லது. நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். கடன் பிரச்சினை குறையும். வீடு, நிலம், வாகனம் போன்றவைகள் வாங்குவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.