மீனம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
மீனம் வார ராசிபலன்
மீனம்- வார ராசிபலன்
Published on

மீனம்

தெய்வகடாட்சம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும்.

சிலர் நவீன வெளிநாட்டு செல்போன் வாங்குவீர்கள். படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகழ்ச்சியான சூழல் நிலவும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை என அனைத்து விதமான சுபபலன்களும் நடக்கும். தந்தை மகன் உறவு பலப்படும். ஒட்டாமல் இருந்த உறவுகள் இணைவார்கள். பல தலைமுறையாக விற்காமலிருக்கும் பூர்வீகச் சொத்துகள் விற்றுவிடும்.

தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். பிரிந்த கணவன் மனைவி சேர்ந்து குடும்பம் நடத்துவர்.பிரதோஷ நாளன்று பாலபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com