

இலக்கை நோக்கி முன்னேறும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி குருவின் ஒன்பதாம் பார்வை ராசியில் உள்ள சனியின் மேல் பதிகிறது.ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாகக் குறையும். வாழ்க்கைத் தரம் உயரும். வராது என்று நினைத்த கடன் தொகை வசூலாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். ஆரோக்கியமாக வாழ்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசனை அதிகமாகும். அநாவசிய செலவுகள் குறையும்.
பொருளாதார முன்னேற்றம் பெருகும் எதிர்பார்த்ததை விட அதிகமாக தனவரவு இருக்கும். வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை விரிவாக்கி லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று தயிர் அபிஷேகம் செய்து விநாயகரை வழிபடவும்.