துலாம்- 2026 வார ராசிபலன் 5.7.2026 முதல் 11.7.2026 வரை

புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை.
Thulam weekly rasipalan
துலாம் வார ராசிபலன்
Published on

துலாம்

தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வருமானமும், குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை அதிகரிக்கும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். மனைவி வழிச் சொத்தை மாற்றி எழுதுவதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. திருமணத் தடை அகலும். பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து வீட்டிற்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள். புதிய சொத்துக்கள் சேரும். வைத்தியம் பலன் தரும். 10.7.2026 அன்று மாலை 6.45க்கு சந்திராஷ்டம ஆரம்பிப்பதால் சிலருக்கு கண், பல் தொந்தரவு ஏற்படலாம். வீண் அலைச்சலால் மன சஞ்சலம் ஏற்படும். புதிய முயற்சிகள், பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com