சிம்மம் - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
சிம்மம் வார ராசிபலன்
Published on

நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் வாரம். ராசி அதிபதி சூரியன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் வழங்கக்கூடிய காலமாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பிரார்த்தனைகளின் மூலம் மன நிம்மதி ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ஆரோக்கியத்தை காக்க யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேருவார்கள். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். தினமும் சூரிய நமஸ்ஹாரம் செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com