என் மலர்tooltip icon

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    கடன் சுமை குறையும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிப்பதால் மதி நுட்பமான காரியங்களால் எல்லோரது நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தனித்த அடையாளத்துடன் இருப்பீர்கள்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 5-ம் அதிபதி சுக்ரன் ராசியில் நிற்பதால் பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும்.

    குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். 6ம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்றதால் அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். பழையவீட்டை விற்றுவிட்டு புதிது வாங்கத் திட்டமிடுவீர். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

    நோய் தாக்கம் வெகுவாக குறையும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். குல தெய்வ, குடும்ப தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்ற உகந்த காலம். உயர்கல்வி முயற்சி கைகூடும். கலைத்துறையினரின் திறமை மிளிரும். அமாவாசைக்கு பள்ளி மாணவர்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×