வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை

Published on

மகரம்

சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. வாடகை வருமானம் தரக்கூடிய புதிய சொத்துக்கள் சேரும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்கள் விற்று முழுப் பணமும் வீடு வந்து சேரும். சகோதரிகளுடன் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தலாம்.

தொழில் மூலம் புகழ், வெற்றி, லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்றமும், மேன்மையும் உண்டாகும். அதற்கு தேவையான தொழில் கடனும் கிடைக்கும். சகோதர, தம்பதிகளுக்குள் உறவி னர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலில் சிறு மனக் கசப்பு தோன்றலாம்.

படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். திருமண வயதினருக்கு சாதகமான வரன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி பதவி, ஊதிய உயர்வுடன் கிடைக்கும். சிலருக்கு பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உள்ளது. அமாவாசை அன்று உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com