மகரம் - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

கை விட்டுப் போன சொத்துக்கள் கைவசமாகும்.
மகரம் வார ராசிபலன்
Published on

மாற்றமும், ஏற்றமும் உண்டாகும். வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது.சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். தொழில், வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். இதுவரை தேக்கமடைந்த கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

கலைப் பொருட்கள் சேமிப்பீர்கள். கணவன் ,மனைவி ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் வந்து சேரும். காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். கை விட்டுப் போன சொத்துக்கள் கைவசமாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சொத்துக்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாயகரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com