வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை

Published on

கடகம்

சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 6,9-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். திருமண முயற்சிகள் வெற்றி தரும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும். தொழில், உத்தியோகத்தில் திட்டமிட்டு வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

தொழிலாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அடமானத்திலிருக்கும் வீட்டை, நகையை மீட்க தேவையான பண உதவி கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.

16.3.2026 அன்று மாலை 6.14 முதல் 18.3.2026 அன்று இரவு 11.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசியமற்ற வம்பு, வழக்கை தவிர்த்தல் நலம். அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com