கடகம் - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கடகம் வார ராசிபலன்
Published on

தெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம். கடக ராசிக்கு 6,9ம் அதிபதியான குரு பகவான் ராசியில் உச்சம் பெற்று ஜென்ம குருவாக பலன் வழங்கப் போகிறார். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இழுபறியாக இருந்த பணிகள் முடியும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புதியபொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் மற்றும் குல தெய்வத்தின் நல்லா சிகள் நிரம்பப் பெறுவீர்கள்.

இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். சுயமுயற்சி, உழைப்பினால், கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com