கடகம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
Kadagam weekly rasipalan
கடகம் வார ராசிபலன்
Published on

கடகம்

முன்னேற்றமான வாரம்.ராசியில் குரு சுக்ரன் சேர்க்கை உள்ளது. தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும். கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்த்தம் உண்டாகும்.பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.திங்கட்கிழமை பச்சரிசி தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com