

முன்னேற்றமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலப்படுவதால் மனம், புத்தி, செயல் இவற்றால் ஒன்றுபடுவீர்கள். குல தெய்வ அருளும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அறியாமல் வாங்கிய வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். பருவப் பெண்களின் மனதிற்கு பிடித்த மணாளனே மாலையிடுவார். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட காலதாமதம் அகலும். தடைபட்ட வாடகை வருமானம் கிடைக்கும்.பல நாட்களாக நோய்க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகளால் ஆதாயமுண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரதோஷ நாளன்று வாசனை திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்யவும்.