

புது வசந்தம் பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஆன்ம பலம் பெருகும். பொது ஜனத் தொடர்பில் இருப்பவர்களின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கு பலர் அடி பணிவார்கள். அரசியல் ஆதாயம், குல தெய்வ கடாட்சம் பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. பித்ருக்களின் நல் ஆசியால் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் நிலவிய சிரமங்கள் அகலும் . புண்ணிய சேத்திரங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு அல்லது பொருள் விரயம் ஏற்படும். அலங்காரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும் தனித்திறமை வெளிப்படும். வியாபாரத்தில் நிலவிய எதிர்ப்புகள் சீராகும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக பிரிந்து வாழலாம். வீண் அலைச்சல் விரயத்தை தவிர்ப்பது நல்லது. நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். சனிக்கிழமை ஸ்ரீ வீரபத்திரரை வணங்கவும்.