கும்பம்- வார ராசிபலன் 21.6.2026 முதல் 27.6.2026 வரை

கடன் நிவர்த்தி, கடன் தள்ளுபடி போன்ற சகாயமான பலன்கள் நடக்கும்.
kumbam weekly rasipalan
கும்பம் வார ராசிபலன்
Published on

கும்பம்

புதிய சிந்தனைகள் உதயமாகும் வாரம். ராசியில் ராகுவும் ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளது. வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். கடன் நிவர்த்தி, கடன் தள்ளுபடி போன்ற சகாயமான பலன்கள் நடக்கும். சிலருக்கு ஒரு விபரீத விளைவு ஏற்பட்ட பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும். சிலர் அதிர்ஷ்டவசமாக தலைமுறைக்கும் தேவையான வருமானத்தை சம்பாதித்து விடுவார்கள்.ராசிக்கு இரண்டில் சனி பகவான் நிற்பதால் கண்கள் தொடர்பான சிகிச்சைகளில் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை புனரமைப்பீர்கள். 21.6.2026 அன்று மாலை 3.40 முதல் 24.6.2026 நள்ளிரவு 12.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காலபைரவர் வழிபாட்டால் மேன்மையான பலன்களை அடைய முடியும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com