கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன விவோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன விவோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்
Published on

விவோ நிறுவனம் தனது X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முந்தைய தகவல்களில் புதிய விவோ ஸ்மார்ட்போன் சோனி IMX989 பிரைமரி கேமரா மற்றும் விவோ V2 ISP சிப் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வந்தது.

அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல் சிங்கில் கோரில் 1485 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 4739 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இதுதவிர புதிய விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், UFS4.0 ஸ்டோரேஜ், LPDDR5X ரேம் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com