மனைவியுடன் விவாகரத்து- விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்

பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள்.
மனைவியுடன் விவாகரத்து- விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்
Published on

வாஷிங்டன்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக திகழ்ந்து வருபவர் பில் கேட்ஸ். இவரது முன்னாள் மனைவி மெலிண்டா.

இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.

அதன் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர். இதனால் அவர்களது 27 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பவுலா ஹர்ட்டின் கணவர் மார்க் ஹர்ட் பிரபல ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு கேத்ரின், உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மார்க் மரணம் அடைந்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள்.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதே போல பல இடங்களுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுவருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.

டென்னிஸ் மீது அவர்கள் வைத்து இருந்த ஆர்வம் தான் 2 பேரையும் காதலில் விழ வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை 2 பேருமே இதுவரை மறுக்கவில்லை.

பவுலா ஹர்ட் தொழில் மேலாண்மை பட்டப்படிப்பு முடித்து உள்ளார், அவர் விற்பனை மற்றும் நிர்வாக துறையில் நீண்ட காலம் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com