தமிழ்நாடு செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... 6 மின்சார ரெயில் சேவை இன்று இரவு ரத்து

Published On 2025-09-11 11:05 IST   |   Update On 2025-09-11 11:05:00 IST
  • மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
  • கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மற்றும் மின்சார ரெயில் ஆகியவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூர் மார்க்கெட்டில் இருந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை புறப்பட்டு செல்லும் ரெயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் ரெயில்களால் பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பயணிகள் சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது. இன்று இரவு 10.35, 11.20 மற்றும் நாளை அதிகாலை 4.15 மணி, 4.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News