மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நள்ளிரவு வரை சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் நள்ளிரவு வரை சோதனை
Published on

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் புரோகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் பால மணிகண்டன் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. சோதனைக்கு பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com