தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 223 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
- மேட்டூர் அணையில் நேற்று 88.58 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 87.65 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 117 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 223 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 88.58 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 87.65 அடியாக சரிந்துள்ளது.