விளையாட்டு
null

VIDEO: இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும்- ருதுராஜ் நம்பிக்கை

Published On 2025-04-11 08:03 IST   |   Update On 2025-04-11 08:14:00 IST
  • லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.
  • 2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மீண்டும் எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருதுராஜ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.

2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார். 



Tags:    

Similar News