இந்தியா

வளர்ப்பு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்த எஸ்.பி.- உத்தரவை ரத்து செய்து ஐ.ஜி. அதிரடி

Published On 2022-07-23 08:54 GMT   |   Update On 2022-07-23 11:10 GMT
  • போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
  • போலீஸ்காரர் திருவனந்தபுரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் சர்மா.

இவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்கு ஆகாஷ் நியமிக்கப்பட்டார். சம்பவத்தன்று இவர் பணிக்கு சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யின் வளர்ப்பு நாயை குளிப்பாட்டுமாறு கூறினர்.

இதற்கு போலீஸ்காரர் மறுப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்தனர்.

இதை அறிந்ததும் போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்யும்படி எஸ்.பி.உத்தரவிட்டார். இதற்காக போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

இதுபற்றி போலீஸ்காரர் ஆகாஷ், போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தார். தன்னை வேண்டுமென்றே சஸ்பெண்டு செய்திருப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி டி.ஜி.பி. போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில் போலீஸ்காரர் ஆகாஷ் மீது தவறு இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ்காரர் ஆகாஷை சஸ்பெண்டு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

பின்னர் அவர் திருவனந்தபுரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News