இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது வகுப்புவாத வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகள்.. மெகபூபா முப்தி கவலை

Published On 2025-04-29 20:03 IST   |   Update On 2025-04-29 20:03:00 IST
  • "தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்" என்று துயர அழைப்புகள் வருகின்றன.
  • மற்றவை வேறுவிதமாக முடிவு செய்துள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, அமைதியையும் நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களிடமிருந்து "தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்" என்று துயர அழைப்புகள் வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன, மற்றவை வேறுவிதமாக முடிவு செய்துள்ளன" என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலையிட்டு, அனைத்து காஷ்மீர் மாணவர்களும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மெஹபூபா வலியுறுத்தினார்.

கூடுதலாக, சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண இதுபோன்ற பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

Tags:    

Similar News