பீகார் தேர்தல்: பிரதமர் மோடி 15-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்

தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக இயங்கி வருகின்றன.‘எனது வாக்குச்சாவடி வலிமையானது’ என்ற திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நடக்கிறது.
பீகார் தேர்தல்: பிரதமர் மோடி 15-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்
Published on

புதுடெல்லி:

243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி ஆகிய பிரதான கூட்டணிகளும், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக இயங்கி வருகின்றன. மறுபுறம் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரமும் அனல் பறந்து வருகிறது.

அந்தவகையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் விரைவில் இணைகிறார்கள்.

குறிப்பாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். பா.ஜ.க. தொண்டர்களுடனான அவரது கலந்துரையாடலுடன் இந்த பிரசாரம் தொடங்குகிறது.

'எனது வாக்குச்சாவடி வலிமையானது' என்ற திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நடக்கிறது. இதில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு பீகார் பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com