கல்லூரி மாணவர் சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லூரி மாணவர் சாவு
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரது மகன் தனசேகர பாண்டியன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கணேஷ் (18). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

நேற்று காரியாபட்டியில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு சென்றனர். தனசேகரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியனேந்தல் பகுதியில் வந்தபோது முன்னால்சென்ற லாரியை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில்மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த தனசேகர பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com