நெல்லை சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் இடமாற்றம்-டி.ஐ.ஜி. உத்தரவு

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் வள்ளியூர் சரகத்திற்குட்பட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  5 பேர் இடமாற்றம்-டி.ஐ.ஜி. உத்தரவு
Published on

நெல்லை:

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் வள்ளியூர் சரகத்திற்குட்பட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர்கள்

அதன்படி திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வள்ளியூர் குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சாந்தி திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளளர்.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பணகுடி சரகத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com