கட்டப்பஞ்சாயத்து நிலையமாக மாறிய தாண்டிக்குடி போலீஸ் நிலையம்

போலீஸ் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து மூலம் பிரச்சினைகளை தீர்த்து, உண்மைகளை மறைத்து அதன் மூலம் வளம் காண்கின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் அவர்களுக்கு அச்சுறுத்த லாக உள்ளார்கள் என்று பொதுமக்கள் வேதனை யடைந்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சமீப காலமாக இங்கு வரும் புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்படுவதில்லை. இங்குள்ள அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து மூலம் பிரச்சினைகளை தீர்த்து, உண்மைகளை மறைத்து அதன் மூலம் வளம் காண்கின்றனர். இதில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் அதிகார மையமாக நடந்து கொள்வது சக போலீசார் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பெரியூர் நல்லூர் காடு பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற பெண் மரம் விழுந்து மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளனர். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக பாச்சலூர் பகுதியில் கடந்த வருடம் பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி மர்மமான முறையில் தீக்காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து இது வரை எந்தவித உண்மையும் வெளிவரவில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியும் கிணற்றில் போட்ட கல் போல கிடக்கிறது. அதே போல பல்வேறு வழக்குகள் வெளிவராமலேயே முடிந்து வருகிறது.

காபி எஸ்டேட் பகுதி களில் திருட்டு, விவசாய நிலங்களில் அவகோடா, காபி உள்ளிட்ட விளை பொருட்கள் திருடு போவதும் அதிகரித்து வருகிறது. இங்கு பணி யாற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் போலீஸ் நிலையத்தில் நியாயம் கிடைக்காத சூழலில் பொதுமக்கள் செய்வ தறியாது தவிக்கின்றனர்.

இங்கு பணியாற்றிய போலீசார் அதிகாரிகளின் நடவடிக்கைகளால் சமீபகாலமாக இடமாறுதல் பெற்று சென்று விடு கின்றனர். கொடைக்கானல், தாண்டிக்குடி போலீஸ் நிலையங்களில் மாறி, மாறி பணியாற்றிய இவர்கள் மீது ஏராளமான புகார்கள் சென்றதால், அப்போதைய தென் மண்டல ஐ.ஜி., இவர்களை மலைப்பகுதியில் பணியமர்த்தக் கூடாது என உத்தரவிட்டார். ஆனால் மீண்டும் இப்பகுதியிலே பணிமாறுதல் பெற்ற நிலையில், தனி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை பிடிக்காமல் அவர்களை தப்பிக்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் இங்கு நிகழும் பிரச்சினை களை ஆய்வு செய்தால் உண்மை நிலை வெளிச்சத்தி ற்கு வரும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் அவர்களுக்கு அச்சுறுத்த லாக உள்ளார்கள் என்று பொதுமக்கள் வேதனை யடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com