திருமணம் செய்வதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி: கிராம நிா்வாக அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்கு

உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி களஞ்சியம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
திருமணம் செய்வதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி: கிராம நிா்வாக அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்கு
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தை சோ்ந்த முனியாண்டி மகன் செந்தில்மாரி(வயது31). இவா் தஞ்சை மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இவருக்கும், ஆக்கடா வலசை கிராமத்தை சோ்ந்த களஞ்சியம் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பெண்ணின் வீட்டாா் 40 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீா்வரிசை தருவதாக பேசப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே வீட்டு வேலை நடப்பதாக கூறி முன்பணமாக ரூ.1.07 லட்சத்தை செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி(34), ராணி(35) ஆகியோா் பெற்றதாக கூறப்படுகிறது. நிச்சயித்த படி அவர்களது திருமணம் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்திருக்க வேண்டும். ஆனால் திருமணத்துக்கு மாப்பிள்ளை செந்தில்மாரி மற்றும் அவரது குடும்பத்தினா் வரவில்லை.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி களஞ்சியம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி, ராணி ஆகியோா் மீது 3 பிரிவுகளில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com