உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம்

Published On 2022-07-11 08:55 GMT   |   Update On 2022-07-11 08:55 GMT
  • தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது.
  • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

விழுப்புரம்:

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய (ஆர்.சி. எச்) துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாநிலத் துணைத் தலைவர் நிலா ஒளி, மாநில பொருளாளர் ராஜலட்சுமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிமுத்து வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் சிவகுரு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் சிங்காரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதம் ரூ..1500 மட்டுமே வழங்கி, வரும் இன்றைய காலச் சூழ்நிலையில் குடும்பம் நடத்த முடியாத அவல நிலையில் உள்ளனர். அரசு விதிப்படி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு விடுமுறை, இலவச சீருடை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News