உள்ளூர் செய்திகள்

சேலத்தில் பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Published On 2023-07-03 14:44 IST   |   Update On 2023-07-03 14:44:00 IST
  • அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இவர் மீது ஒரு வழக்கு தொடர்பாக பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
  • தலைமறைவான தேடி வந்த நிலையில் இன்று காலை அருள் மணியை ேபாலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள பெருமாள் கவுண்டபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அருள்மணி (வயது 29).

இந்த நிலையில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இவர் மீது ஒரு வழக்கு தொடர்பாக பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தலைமறைவான தேடி வந்த நிலையில் இன்று காலை அருள் மணியை ேபாலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (48) மற்றும் இவரது மகன் ரஞ்சித் குமார் (24) ஆகியோர் மீது சேலம் ஊரக சமூக நல அலுவலர் ஜீவா கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

Tags:    

Similar News