உள்ளூர் செய்திகள்

மரவள்ளித் தோட்டத்தில் செம்பேன் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்த குழுவினர்.

அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

Published On 2023-07-03 13:01 IST   |   Update On 2023-07-03 13:01:00 IST
  • கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
  • இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக் கன்பாளையம் பகுதி கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

பெத்தநாயக்கன் பாளை யம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளி பயிர்களில், இலையின் அடிப்பகுதியில் இருந்து சாறு உறிஞ்சி தாக்கும் செம்பேன் சிலந்தி தாக்குதலால், இலைகள் பழுத்து உதிர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது தோட்டக் கலைத் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பெத்தநாயக்க ன்பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோதைநாயகி, உதவி அலுவலர் மதியழகன் மற்றும் ஏத்தாப்பூர் மர வள்ளி ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை பேராசி ரியர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பெத்தநாயக்க ன்பாளையம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளித் தோட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து இக்குழுவினர் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கினர். 

Tags:    

Similar News