திருவாரூரில் குடியரசு தினவிழா

திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருவாரூர் விளையாட்டு அரங்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஏற்றினார்.
திருவாரூர் விளையாட்டு அரங்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஏற்றினார்.
Published on

திருவாரூர்:

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஏழு பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 616 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கும் என பல்வேறு துறைகளில் சார்பில் 705 பேருக்கு ரூ 2,06,09,915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com