

காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 30 பஞ்சாயத்துகள் உள்ளது.
கடந்த ஆட்சியில் பல்வேறு பஞ்சாயத்துகளில் வரவு செலவு உட்பட பல்வேறு நிகழ்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தனி அலுவலர் காலத்தில் பஞ்சாயத்துகளில் நடந்த வரவு செலவு கணக்கு மற்றும் பதிவேடுகள் ரசீதுகள் ஆகியவற்றை தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர்.
முதல் கட்டமாக 10 பஞ்சாயத்துகளில் நடந்த வரவு செலவு கணக்கு பில் புத்தகங்கள் ரசீதுகள் ஆகியவற்றை சரிபார்த்தனர்.
நேற்று 20 பஞ்சாயத்துகளில் வரவு செலவு கணக்கு புத்தகம் பதிவேடுகள் ரசீது புத்தகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
2017 முதல்2020 ஆம் ஆண்டு வரை காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலராகவும் பி டி ஓ (திட்டம்) ஆக பணிபுரிந்த வர் வடிவேலன் என்பவர் வீட்டில் கடந்த ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கலெக்டர் கலெக்டர் மலர்விழி ஆதரவாளராக செயல்பட்ட வடிவேலன், பணி காலத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.