கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
- கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ராம்குமார் (வயது 19). இவர் பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ராம்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை கண்டித்தனர். இதில் அவர்க ளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த ராம்குமார் வீட்டை வெளியேறி அருகே உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.