அலங்காநல்லூரில் விழிப்புணர்வு பேரணி

அலங்காநல்லூரில்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அலங்காநல்லூரில் விழிப்புணர்வு பேரணி
Published on

அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரத்தை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணைத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, காளிதாஸ், மாவட்ட வள பயிற்றுநர் தேவி, வட்டார இயக்க மேலாளர் மகாலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராதிகா, கலா ராணி, தேவி, முத்துச்செல்வி, உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் மரியா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com