

தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் மதிப்பீட்டுக் குழுத்தலைவர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் முரளிதரன், குழு உறுப்பின ர்களான எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வ ரன், சதன் திருமலைக்குமார், செந்தில்குமார், பாலசுப்ரம ணியன், முகம்மது ஷா நவாஸ், ராஜ்குமார், செல்லூர் கே.ராஜு ஆகியோர் முன்னிலையில் மதிப்பீட்டுக்குழுவின் ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராம கிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செ ல்வன் , தமிழ்நாடு சட்ட ப்பேரவையின் செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் , மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, மேகமலை மண்டல துணை இயக்குநர் ஆனந்த்,
மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் குழுவின் தலைவர் ராஜா நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2021-2023-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு என்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட சட்டமன்ற த்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பி னர்களைக் கொண்ட குழுவாகும். தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடரின் போது வெளியிடப்படும் அரசுத் துறைகளின் அறிவிப்புகள்,
அதற்கான செலவினங்கள் நிதிப் பயன்பாடு, அரசின் திட்டங்கள் பொதுமக்க ளுக்கு உரிய வகையில் சென்றடைகிறதா, வளர்ச்சி த்திட்டப்பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வரப்படு கிறதா உள்ளிட்டவைகள் குறித்து இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் அரசுத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள் மற்றும் நிதிப்பயன்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த ப்பட்டு, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்தி ட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தின் போது விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.