கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா

மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.அனுமனுக்கு வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனை நடைபெற்றது.
மந்தித்தோப்பு பூமாதேவி ஆலயத்தில் அனுமனுக்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.
மந்தித்தோப்பு பூமாதேவி ஆலயத்தில் அனுமனுக்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர், அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி திரவியம், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆஞ்ச நேயர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பி ரமணியன் மாரிஸ்வரன் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா சிறப்புப் பூஜையில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜை தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து அனுமனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com