உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி

Published On 2023-02-10 08:16 GMT   |   Update On 2023-02-10 08:16 GMT
  • இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம்.
  • 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், புனல் குளத்தில் உள்ள கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவரும்,

இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவருமான மருத்துவர் சரவணவேல் அளித்தார்.

பயிற்சியை கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் சித்ராதேவி தொடங்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் கிங்ஸ் கல்லூரியின் நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு, மருத்துவமனை நிறுவனத்துறை தலைவர் ஞானசவுந்தரி கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியானது மேலும் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News