பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.08 அடியாக குறைந்து உள்ளது.அணையில் இருந்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணை நிலவரம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட த்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 90.08 அடியாக குறைந்து உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 711 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com