பாம்பு கடித்து மூதாட்டி சாவு

ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பாம்பு கடித்து மூதாட்டி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்துள்ள கரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (73). இவர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. இதையடுத்து அந்தப் பாம்பை அடித்து கொன்று தன்னுடன் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஈஸ்வரியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com