பவானிசாகர் அணை நீர்மட்டம்

காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணை நீர்மட்டம்
Published on

ஈரோடு:

ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்தி ற்காக கீழ்ப்பவானி வாய்க்கா லுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com