உள்ளூர் செய்திகள்

வேளாண் வணிகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-06-29 10:17 GMT   |   Update On 2022-06-29 10:17 GMT
  • வேளாண் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்டு, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளைப் கலெக்டர் பார்வையிட்டார்

அரியலூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்டு, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.

முகாமில், பல்வேறு வேளாண் தொடர்பான பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

இம்முகாமில், வேளாண் வணிக துணை இயக்குநர் சிங்காரம் மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News