மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்கு சமரச தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. 87 குற்ற வழக்குகள் வரப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்கு சமரச தீர்வு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துரை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. செந்துறை நீதிமன்ற நீதிபதி ஏக்னெஸ் ஜெப கிருபா மற்றும் அரியலூர் மகிளா நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற

இந்த சமரச நீதிமன்றத்தில் 90 வழக்குகள் கொண்டு வரப்பட்டது. அந்த வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜராகினர். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் ஒப்புதலுடன் 87 குற்ற வழக்குகள் மற்றும் 3 சிவில் வழக்குகளை சமரசம் செய்து வைத்தனர். இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com