முதல்வர் விருதுபெற தொண்டுநிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் விருதுபெற தொண்டுநிறுவனங்களுக்கு அழைப்பு 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் விருதுபெற தொண்டுநிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னனேற்றத்துக்காக சேவைப் புரிந்தோர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வர், சுதந்திரதினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தோர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்க உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்களில் கீழ்காணும் தகுதியுடையவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களுடன் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் நகலினை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 20இல் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை 04329 228516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com