உள்ளூர் செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-27 08:30 GMT   |   Update On 2022-06-27 08:30 GMT
  • போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
  • பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஜெய–ங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவ–லகம் முன்பாக தொடங்கி அண்ணா சிலை வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது.

போலீஸ் இன்ஸ்பெ–க்டர்கள் ஜெகதீசன் (தா.பழூர்), குணசேகரன் (ஆண்டிமடம்), கோபி (மீன்சுருட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தொடங்கி வைத்தார்.

பேரணியில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி தாளாளரும், பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவருமான முத்துக்குமரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகர், இளங்கோவன் ரமேஷ் உள்ளிட்ட போலீசார்கள், பொதுமக்கள்,

அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவியர்கள் உள்ளிட்டோர் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகையிலேந்தி வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்ப்புணர்வு ஏற்படுத்தி பேரணியாக சென்றனர். முடிவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News