சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் 2024 கேப்டன்கள் போட்டோஷூட்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 அணிகள் கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.அந்த வகையில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான அனைத்து அணி கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் 2024 கேப்டன்கள் போட்டோஷூட்
Published on

சென்னை:

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 அணிகள் கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான அனைத்து அணி கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் இடம் பெற்றிருந்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் டோனி சாதாரண வீரராக மட்டுமே களமிறங்குவார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com